‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் தாதாவாக பூஜா குமார்

சிவாஜி பேரன் துஷ்யந்த் புதிதாக ஆரம்பித்துள்ள ஈஷான் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கும் முதல் படம் 'மீன் குழம்பும் மண்பானையும்'. இதில் ஜெயராம் மகன் காளிதாஸ், பிரபு, ஆஷ்னா ஜவேரி, ஊர்வசி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசை அமைக்கிறார். லட்சுமண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் அமுதேஷ்வர் இயக்குகிறார்.

இது ஒரு கலகல நகைச்சுவைப் படம். இதில் ஒரு டெரரான அதாவது நவீன சொர்ணாக்கா மாதிரி பெண் தாதா வேடம். இதில் நடிக்க சிம்ரன் உள்ளிட்ட முன் னாள் நாயகிகள் பலரிடம் பேசி னார் கள். யாரும் ஒத்துவரவில்லை. இப்போது அந்த வேடத்தில் பூஜா குமார் நடித்து வருகிறார். இதற் காக அவர் கடந்த ஒரு வாரமாக ஒத்திகை- யில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு முன் தாதாவாக நடித்த நடிகைகளின் படங்கள், பிரகாஷ்- ராஜ், ரகுவரன், மாதிரி பெண்களில் பக்காவான வில்லியாக மாற வேண்டும் என்பதுதான் பூஜாவின் ஆசையாம். இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!