28 ஆண்டுகளுக்கு முன்பு பராமரித்த குழந்தையை இன்று மருத்துவராகப் பார்த்த தாதி

வா‌ஷிங்டன்: இதுதான் விதி என சில நேரங்களில் நம்ப வேண்டியுள் ளது. கலிஃபோர்னியாவின் பாலோ அல்டோவைச் சேர்ந்த அமெரிக்க தாதி ஒருவர், 28 ஆண்டுகளுக்கு முன்பு குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை அதே மருத்துவமனையில் தற் போது மருத்துவராகச் சந்தித்துள் ளார். ஸ்டான்ஃபோர்ட் லுசில் பெக்கர்ட் குழந்தை மருத்துவமனையில் திருவாட்டி வில்மா வோங் தாதியாகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் அதே மருத்துவ மனையில் குழந்தை மருத்துவராகப் பயிற்சி பெற்றுவரும் டாக்டர் பிரான்டன் செமினாடோரை அவர் சந்தித்தார். அப்போது பழைய கதைகளை இருவரும் பகிர்ந்துகொண்டனர். 28 ஆண்டுகளுக்குமுன் தான் பராமரித்த குழந்தையே தற் போது மருத்துவராக வந்துள்ளார் என்பதை தாதி வில்மா வோங் அறிந்துகொண்டார். டாக்டர் செமினாடோர் பிறந்த போது ஒரு கிலோ எடை மட்டுமே இருந்தார்.

இதையடுத்து சுவாசக் குழாயுடன் அவர் 40 நாட்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட் டார். அப்போது அவரை கவனித் துக் கொண்டவர் திருவாட்டி வோங். இருவரும் தற்போது சந்தித்த அனுபவங்களை ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளனர். அதில் 28 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையாக இருந்த டாக்டர் செமினாடோரை திருவாட்டி வோங் தமது மடியில் வைத்திருக் கும் படமும் பதிவேற்றப்பட்டது. மற்றொரு படத்தில் இருவரும் உள்ளனர். மருத்துவமனையில் நிகழ்ந்த சந்திப்பு தாதிக்கும் நோயாளிக்கும் இடையே இதய பூர்வமான இணைப்பை ஏற்படுத்தி யுள்ளது என்று ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.