விமான நிலையத்தில் வழங்கப்படும் தட்டுகளில் ஏராளமான கிருமிகள்

வா‌ஷிங்டன்: விமான நிலையங் களில் பாதுகாப்புச் சோதனையின் போது பொருட்களை வைப்பதற்காக வழங்கப்படும் தட்டுகளில் கழி வறையைவிட அதிக கிருமிகள் உள்ளன என்று பின்லாந்து, பிரிட் டிஷ் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட தட்டுகளில் நுரையீரல் தொற்றுநோயை ஏற் படுத்தக்கூடிய வைரஸ் கிருமிகள் இருக்கலாம் என்று ஆய்வு தெரி வித்தது. கடந்த வாரம் 'பயோமெட்' தொற்றுநோய் சஞ்சிகையில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப் பட்டன. 2015-2016ல் சளிக்காய்ச்சல் அதிகமாக இருந்த காலக் கட்டத்தில் ஹெல்சிங்கி விமான நிலையத்தில் இருந்த தட்டுகளி லிருந்து மூன்று வெவ்வேறு சமயங்களில் மாதிரிகள் சேகரிக் கப்பட்டன.

அப்போது எட்டு மாதிரிகளில் நான்கில் சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் கிருமி கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பின்லாந்தின் தேசிய சுகாதார, நல அமைப்பும் நாட்டிங்காம் பல் கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் கட்டுரை ஆசிரியர், "விமான நிலையத்தில் பயணிகளுக்கு கிருமிகள் தொற்றும் தளமாக தட்டுகள் உள்ளன," என்று குறிப்பிட்டார். இதனால் கைகளைக் கழுவு வதற்கு கிருமி நாசினியை பயணி ளுக்கு வழங்க வேண்டும் என்றும் தட்டுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்புச் சோதனையின் போது வழங்கப்படும் தட்டு மூலம் கிருமி பரவும் வாய்ப்பு உள்ளது என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!