பத்து லட்சம்: நன்றி கூறும் சாய்பல்லவி

இளம் நாயகி சாய் பல்லவியை டுவிட்டர் தளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இது மலையாளத் திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ‘பிரேமம்’ மலையாளப் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் சாய்பல்லவி. இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மும்மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மிகக் குறுகிய காலத்தில் டுவிட்டரில் இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது. இது சாய் பல்லவிக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தன் மீது இந்தளவு அன்பு வைத்துள்ள ரசிகர்கள்தான் தம்மை வாழ்க்கையில் தற்போதுள்ள நிலைக்கு அழைத்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சாய் பல்லவி. தற்போது தமிழில் சூர்யாவுடனும் தனு‌ஷுடனும் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்