‘கனவுகள் நிஜமாகின்றன’

“ஓவியங்கள் தீட்டுவது எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம். விண்வெளி, விண்மீன்கள், வேற்றுக்கிரங்கள் குறித்தெல்லாம் அடிக்கடி கனவு காண்பேன். இந்தக் கனவுகளில் கண்டவை எல்லாம் பெரும்பாலும் ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குள் நிஜத்தில் நடக்கும். இல்லையெனில் கனவில் கண்ட விஷயங்களை எல்லாம் ஏதேனும் திரைப்படத்திலாவது பார்க்க நேரிடும்,” என்று ஆச்சரியமூட்டுகிறார் இளம் நாயகி நிவேதா பெத்துராஜ்.

கனவில் காணும் விஷயங்கள் குறித்து குறிப்புகள் எழுதி வைத்து, பின்னர் ஓவியமாகத் தீட்டுவது இவரது வழக்கமாக உள்ளது. இவ் வாறு நிறைய ஓவியங்களை அடுத்தடுத்து வரைந்து சேகரித்து வைத்துள்ளாராம். காதல் குறித்து?

“எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு பையன் காதலிப்பதாகக் கூறினான். ரோஜாப்பூக்களை வைத்து, ஆங்கிலத்தில் ஏதேதோ எழுதியிருந்த வாழ்த்து அட்டையைக் கொடுத்தபோது பயந்துபோனேன். உடனே அங்கிருந்து ஓடிப்போன எனக்கு அப்போது ஆங்கிலத்தில் படிக்கத் தெரியாது. அழகாக இருந்த அந்த வாழ்த்து அட்டையில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது கூட தெரியாது. அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வரும்.” அதன் பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் பல பேர் நிவேதாவிடம் காதலை வெளிப்படுத்தி உள்ளனர். கடைசியாக காதல் விண்ணப்பத்தைப் பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்