மகனை நாயகனாக்கிய மன்சூர் அலிகான்

அலிகான் துக்ளக் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘கடமான் பாறை’. இவர் நடிகர் மன்சூர் அலிகானின் வாரிசு. மகனை வெற்றி நாயகனாக உருவாக்கும் முடிவோடு இந்தப் படத்தைச் சொந்தமாகத் தயாரித்து இயக்குகிறார் மன்சூர். கதாநாயகி யாக அனுராகவியும், இரண்டாவது நாயகியாக ஜெனி பெர்னாண்டசும் நடிக்கின்றனர். மேலும் சிவசங்கர், சார்மி, தேவி, பிளாக் பாண்டி, அமுத வாணன், கனல் கண்ணன், போண்டா மணி, லொல்லு சபா மனோகர், கூல் சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே கள மிறக்கியுள்ளார் மன்சூர். படத்தின் கதையையும் இவர்தான் எழுதி உள்ளாராம்.

“கல்லூரியில் படிக்கும் இளை யர்களில் பலர் தற்போது வழிமாறிப் போகிறார்கள். தாய், தந்தை, ஆசிரியர் என யார் அறிவுரை சொன்னாலும் எதையும் பொருட் படுத்துவதில்லை. அப்படிப்பட்ட ஒரு காதல் ஜோடி கல்லூரிக்குச் செல்லாமல் பெற்றோரை ஏமாற்றுகிறது. “காதலர்கள் இருவரும் ஒரு மலைப்பகுதிக்குச் செல்கிறார்கள். கங்குவாரெட்டி கஞ்சமலை என்று அழைக்கப்படும் அந்த மலைப்பகுதி ஆதிவாசி சூரப்பன் என்பவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காத லர்கள் இருவரும் அவனிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

“வனத்துறை அதிகாரியும் கூட சூரப்பனிடம் சிக்கிக் கொண்டால் உயிரோடு திரும்ப முடியாது. அவன் அந்தளவு கோபக்காரன். சூரப்பன் கட்டுப்பாட்டில் இருப்ப தால் கஞ்சமலையில் இருந்து யாராலும் செம்மரங்களைக் கடத்த இயலாது. கனிம வளங்களையும் திருட முடியாது. “அந்த வனப்பகுதியில் இருந்து எந்தப் பொருளும் வெளியே சென்றுவிடாமல் பாதுகாக்கும் வனக்காவலனாக இருப்பவன் அவன்,” எனக் கதையை விவரிக்கிறார் மன்சூர் அலிகான்.