நடிப்பும் இசையும் எனது கண்கள் - ஆண்ட்ரியா

நடிப்பும் இசையும் தனது இரு கண்கள் என்கிறார் ஆண்ட்ரியா. எனவே எதில் வாய்ப்பு கிடைத்தாலும், அதை தவறாமல் பயன்படுத்திக் கொள்வேன் என்கிறார். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதில் எத்தனை கதாநாயகர்கள் உள்ளனர், எத்தனை நாயகிகள் உள்ளனர் என்றெல்லாம் பார்க்க மாட்டாராம். தனக்கான கதா பாத்திரம் எப்படிப்பட்டது என்பதை மட்டுமே கவனிப்பாராம். திரையுலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆண்ட்ரியா, இத்தகைய தொல்லைகள் குறித்து நடிகைகள் வெளிப்படையாகப் பேசத் துவங்கி இருப்பது நல்ல விஷயம் என்கிறார். “இவ்வாறு வெளிப்படையாகப் பேசினால்தான் தவறு செய்தவர்களை தண்டிக்க முடியும். சினிமா துறையில் எனக்கு அந்த மாதிரி நிலைமை இதுவரை ஏற்படவில்லை. பாலியல் தொல்லைகள் எனக்கு நடந்தது என்று வெளியே வந்து தைரியமாக சொல்பவர்களையும் அப்படி நடப்பதை கண்டித்து பேசியவர்களையும் பாராட்ட வேண்டும்,” என்கிறார் ஆண்ட்ரியா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்