‘பதற்றத்தைக் கட்டுப்படுத்தி ஆடும் அணிக்கே வெற்றி’

மும்பை: கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி என் றாலே பரபரப்பிற்குப் பஞ்சம் இருக் காது. இங்கிலாந்தில் நடைபெற்ற வெற்றி யாளர் கிண்ணப் போட்டி யில் பாகிஸ்தான் அணி இந்தி யாவை வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தை வென்றது. அந்தப் போட்டி யில் பாகிஸ் தான் அணியின் தொடக்க வீரர் பகர் சமான் சிறப் பாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின் சமான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரு கி றார். விரைவில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக் கவுள்ளது. இதில் இந்தியா = பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்க இருக்கிறது.

இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண் டிருக் கிறார்கள். இந்நிலையில் பரபரப்பாக கரு தப் படும் இந்தியா = பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நெருக் கடியைச் சிறப் பாக கையாளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்துப் பகர் சமான் கூறுகையில் “ஒவ்வொரு அனைத்துலக போட்டியிலும் நெருக்கடி இருக் கத்தான் செய்யும். ஆனால், இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் வித்தியாசமான பந்து விளை யாட்டு ஆகும். என்னைப் பொறுத்தவரையில் இந் தியா = பாகிஸ்தான் இடையி லான ஆட்டத்தின்போது நெருக் கடியை சமாளிக்கும் அணிக்கே வெற்றி கிட்டும். நாங்கள் இந்தியாவைவிட சற்று முன்னணியில் இருக்கி றோம். ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸை நாங்கள் சொந்த மைதானமாக கொண்டு விளை யாடி வருகிறோம். அதனால் எங் களுக்கு அதிக அனுபவம் உள் ளது. விராத் கோஹ்லி உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் இல்லாவிடிலும் இந்திய அணி எங்களுக்குக் கடும் சவால் கொடுக் கும். “சிறந்த ஆட்டத்தைக் கண்டு களிக்க காத்திருக்கின் றனர் ரசி கர்கள் என்று நம்புகி றேன்,” என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செல்சியின் வளரும் நட்சத்திரமான டேம்மி அப்ரஹாம்  ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார்.  படம்: ஊடகம்

16 Sep 2019

செல்சி, யுனைடெட், ஸ்பர்ஸ் குழுக்கள் வெற்றி

மேன்சிட்டிக்கு எதிராக கிட்டிய வெற்றியைக் கொண்டாடும் நார்விச் வீரர்கள். இடது படம்: கம்பீரத்துடன் வெற்றி நடை போடும் நார்விச் நிர்வாகி டானியல் ஃபார்க. படங்கள்: ஏஎஃப்பி

16 Sep 2019

எட்டு மாதங்களில் சிட்டிக்கு கிடைத்த முதல் தோல்வி