சிங்கப்பூரில் உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு

ப. பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூரில் 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 பேராளர்கள் கலந்துகொள்ளும் உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று தொடங்குகிறது. அந்த மாநாட்டிற்காக பலரும் ஏற்கெனவே சிங்கப்பூர் வந்துவிட்டார்கள். இரண்டு நாள் மாநாட்டில் மலேசியா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, இங்கி லாந்து, சீனா முதலான நாடுகளைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் பங்கெடுத்துக்கொள்கிறார் கள். சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், உலக தமிழாசிரியர் பேரவை, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

கற்றல் மற்றும் கற்பித்தல் துறையில் உள்ள சவால்களுக்குத் தீர்வு காண்பதும் சிறப்புமிக்க கற்பித்தல் முறைகளையும் உத்திகளையும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதும் இந்த மாநாட்டின் நோக்கம். 'பன்மொழிச் சூழலில் தமிழ் கற்றல், கற்பித்தல்' என்பது மாநாட்டின் கருப்பொருள். மாநாட்டில் 50 ஆய்வறிக்கைகள் தாக்கலாக இருக்கின்றன. உள்துறை சட்ட அமைச்சர் கா.சண்முகம் இன்றைய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார். "இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் 'பன் மொழிச் சூழலில் தமிழ்க்கல்வி' எனும் தலைப்பையொட்டி டாக்டர் சாமுவேல் சுதானந் தாவின் உரை முக்கிய அங்கம் வகிக்கும். நவீன முறையில் தமிழ்மொழியை எப்படி கற் பிப்பது என்பது பற்றிய உத்திகளை அவர் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்," என்று சிங்கப் பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு சி. சாமிக்கண்ணு தெரிவித்தார்.

இந்த இரு நாள் மாநாட்டில் கலந்துகொள்ள விருக்கும் வெளிநாட்டு பேராளர்கள் பெரும் பாலானோர் சிங்கப்பூர் வந்துவிட்டதாகவும் அவர் நேற்றுக் கூறினார். பன்மொழிச் சூழலில் கல்வி கற்பிக்கும் இதர நாடுகளின் ஆசிரியர்கள், கற்பித்தலில் தங்களுக்கு ஏற்படும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதைச் சிங்கப்பூர் ஆசிரியர்கள் நன்கு அறிந்துகொள்ள இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் திரு சாமிக்கண்ணு தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!