குட்கா விவகாரம்: சிபிஐ பிடி இறுகுகிறது; கதிகலங்கும் தமிழக அதிகாரிகள், அரசியல்வாதிகள்

தமிழ்நாட்டில் குட்கா ஊழல் விவ காரத்தில் சிபிஐ பிடி இறுகுவ தால் அரசியல்வாதிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை பலரும் கலக்கமடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசு, அந்த மாநிலத் தில் பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருள்களுக்கு 2013ல் தடைவிதித்தது. இருந்தாலும் உயர் அதிகாரிகள், அரசியல்வாதி கள் உட்பட 23 பேர், ரூ. 39 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்தப் பொருட்களின் விற்பனையை மாநி லத்தில் தொடர்ந்து அனுமதித்த தாக புகார் எழுந்தது.

இது பற்றி திமுக தாக்கல் செய்த ஒரு மனு தொடர்பில் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர், போலிஸ் அதி காரிகளான டி கே ராஜேந்திரன், எஸ் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட மொத்தம் 35 இடங் களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தினார்கள். சோதனைகள் நேற்றும் தொடர்ந்து நடந்தன. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரியிலும் சோதனைகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

இந்தச் சோதனைகளில் ஏராள மான தகவல்களை சிபிஐ அதிகாரி கள் பெற்றிருப்பதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில், சிபிஐ நேற்று ஐவரைக் கைது செய்தது. அவர் கள் யார் என்பது பற்றிய விவரங் கள் தெரியவில்லை. அவர்களில் இருவர் மாநில, மத்திய அரசு அதிகாரிகள் என்றும் மற்ற மூவரும் குட்கா தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வேளையில், குட்கா ஊழல் தொடர்பில் கலால் துறையினர், உணவு பாதுகாப்புத் துறையினர், போலிஸ் அதிகாரிகள் மீது யார் பெயரையும் குறிப்பிடாமல் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பரிவர்த்தனைகளும் இடம்பெற்று இருப்பதால் அமலாக்கப் பிரிவும் அந்த அதிகாரிகள் மீது வழக்கு களைப் பதிந்துள்ளது. குட்கா விவகாரம் மாநிலத்தில் பெரும் சூடுபிடித்திருப்பதை அடுத்து அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் விரைவில் ஏராள பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்று கணிக்கப்படுவதால் இந்த விவகாரத்தில் பரபரப்பு கூடி வருகிறது.