ஜோகூர் பாருவில் மின்தடை; பல கட்டடங்கள் இருளில் மூழ்கின

மலேசியாவின் ஜோகூர் பாருவின் நகர்ப் பகுதியிலும் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் நேற்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் பெரும் மின்தடை ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்துப்போயினர். மின்சாரம் நேற்று மாலை 5 மணி வரை திரும்ப வில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடைத் தொகுதிகள் உள்ளிட்ட பல கட்டடங்கள் இருளில் மூழ்கியதாகவும் தெரியவந்தது. பல சாலை சந்திப்புகளில் போக்கு வரத்து விளக்குகள் எரியவில்லை. ஜாலான் துன் ரசாக், ஜாலான் ஸ்கூடாய், ஜாலான் லார்கின் போன்ற பெரிய சாலைகள் நெடுகிலும் போக்கு வரத்து விளக்குகள் இல்லாமல் போன தால் தேக்கமும் குழப்பமும் நிலவியது. இருந்தாலும் போலிஸ் அதிகாரிகள் பலரும் பணியில் பிரித்து விடப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். உயர்மாடி வீடுகளில் குடியிருக்கும் சிலர் மின்தூக்கிகளில் மாட்டிக் கொண்டு சிரமப்பட்டனர்.

மின்தடை காரணமாக மின் தூக்கிகளில் மாட்டிக்கொண்டதாக சிலர் தங்களிடம் தெரிவித்ததாக லார்கின் தீயணைப்பு மற்றும் மீட் புத்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித் தார். அவர்களுக்கு உதவி செய்வதற் காக ஊழியர்கள் உடனடியாக அனுப் பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஜோகூர் பாருவில் இருக்கும் ஜாலான் தெப்ராவில் மின்தடை காரணமாக போக்கு வரத்து விளக்குகள் எரியாமல் போனதை அடுத்து குழப்பம் நிலவியது. படம்: தி ஸ்டார்/ ஆசியா நியூஸ் நெட்வொர்க்