ஸ்டாலின்: பயங்கரவாதத்தை ஏவியுள்ளது மத்திய அரசு

சென்னை: மத்திய, மாநில அரசுகள் இணைந்து அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது உண்மையாகி உள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில அரசின் அனுமதி இல்லாமல் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட் டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளித்திருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட் டின் துயரம் மறைவதற்குள், அங்கு ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து வரும் அதே வேதாந்தா நிறுவனத்துக்கு மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் இடங்களை மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடக்குவ தில் மத்திய பாஜக அரசும், தமிழகத்தில் உள்ள அதிமுக அரசும் உறுதுணையாக இருந்தது உறுதி யாகி உள்ளதாக தெரிவித் துள்ளார்.

“விளைநிலங்கள், குடிநீர் ஆதாரங்கள், விவசாயிகளின் நலன், அப்பகுதியில் வாழும் மக்களின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று, வாழ்வாதாரத்துக்கும் உயிருக்கும் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் ஹைட்ரோ கார்பன் திட் டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயல்வது கிஞ்சிற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல,” என்று ஸ்டாலின் கூறியுள்ளார். வெகுமக்கள் விரோதத் திட்டங் களைச் செயல்படுத்துவதில் மத் திய அரசு தீவிரம் காட்டி வரு வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாகத் தமிழக மக்க ளின் பெருந்திரள் போராட்டத்தை யும் அடங்கா சினத்தையும் சந்திக்க வேண்டிய கட்டாய நிலை மத்திய அரசுக்கு உருவாகும் என எச்சரித்துள்ளார்.