சுடச் சுடச் செய்திகள்

ஜப்பானில் தொடரும் இயற்கை பேரிடர்கள்

தோக்கியோ: ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் ‘ஜெபி’ எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி கடு மையாக தாக்கியதில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பாகவே அந்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹொக் கைடோ தீவில் கடல்மட்டத்திற்கு கீழே 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.7 என்று பதி வான சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை. சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதி காலை 2.08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஒன்பது பேர் உயிரிழந்ததுடன் குறைந்தது 38 பேர் காணாமல் போனதாக தக வல்கள் வெளியாகின. இந்நிலையி ல், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிற து. காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் மலைப்பிரதேசம் அட்சுமாவில் வசித்த குடியிருப் பாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் உறங்கிக்கொண்டிருந்த போது உலுக்கிய இந்த நிலநடுக்க த்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின. இடி பாடு களில் சிக்கியதில் குறைந்தது 140 பேர் காயமடைந்தனர்.

ஹொக் கைடோ மாகாணத்தில் உள்ள உயர்மாடிக் கட்டடங்கள் அதிர்ந்து குலுங்கின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹொக்கைடோவின் பிரதான விமான நிலையமும் ஜப்பானின் ஐந்தாவது ஆகப் பெரியதுமான நியூ சிதோஸ் விமான நிலையம் குறைந்தது ஒரு நாளாவது மூடப் பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சாரம் தடைப்பட்டதுடன், தண்ணீர் குழாய்கள் சேதமடைந்த தாலும் சுவர் பகுதிகள் இடிந்து விழுந்ததாலும் அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானச் சேவைகள் இன்று தொடரும் என்று ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஸே அபே கூறினார். விமான நிலையத்தில் பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவுபெற்றவுடன் அனைத்துலக விமானச் சேவைகள் கூடிய விரைவில் தொடங்கும் என்றார் அவர். ஒரே வாரத்தில் ஜப்பானை அதிர வைத்த இரண்டாவது பெரிய இயற்கை பேரிடராக இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக அந்நாட்டின் மத் தியப் பகுதியை மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் ‘ஜெபி’ சூறாவளி வேட்டையாடியது. அத்துடன் கொட்டித் தீர்த்த பலத்த மழையைத் தொடர்ந்து கடலில் பேரலைகள் எழுந்தன.

ஜப்பானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹொக்கைடோ தீவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள மலைப் பிரதேசமான அட்சுமாவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon