அமெரிக்காவை காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சி

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் மோசமான நிர்வாகத்திலிருந்து அந்நாட்டைக் காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தக வல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக திரு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளை எடுத்து வருகிறார். இதனால் அமெரிக்காவுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற் கெனவே புகார் கூறி வருகிறார்கள். சொந்த கட்சியிலும்கூட இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக் காவின் நியூயார்க் டைம்ஸ் நாளித ழில் இது தொடர்பாக தலைய ங்கக் கட்டுரை ஒன்று வெளியிடப்ப ட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் டிரம்ப் நிர் வாகத்தில் உள்ள பெயர் குறிப்பிடப்ப டாத மூத்த அதிகா ரியை மேற் கோள் காட்டிச் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், திரு டிரம்பின் இரக்க மற்ற தன்மை, வெளிநாட்டு விவகாரங்களில் தெளிவில்லாமல் எடுக்கும் மோசமான நடவடிக்கை கள், பொருளியல் விவகாரங்க ளில் அவர் எடுக்கும் முடிவுகள் அமெரிக்காவை பின் னுக்குத் தள் ளும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அமெரிக் காவின் மூத்த நிர்வாகி கள், திரு டிரம்பின் நட வடிக்கை களிலிருந்து அந்த நாட்டை ப் பாது காக்க முயற்சி மேற் கொண்டிருக்கி றார்கள் என்று கட்டுரையில் கூறப் பட்டுள்ளது.