மகாதீர்: பெண்களுக்குப் பிரம்படி விதிப்பதை அமைச்சரவை ஏற்கவில்லை

பெட்டாலிங் ஜெயா: திரங்கானுவில் இரு முஸ்லிம் பெண்களுக்குப் பிரம் படி விதிக்கப் பட்டதை முறை அற்ற தண்டனை யாக மலேசிய அமைச்சரவை கருதுவதாக மலே சியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். “இஸ்லாமிய போதனைகளின் மைய பொருளே கருணைதான். அதை அந்தத் தண்டனை பிரதிப லிக்கவில்லை,” என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்ட காணொளி ஒன்றில் கூறினார்.

“அந்த இரு பெண்களும் முதல் முறையாக குற்றம் புரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். பிரம்படி விதிக்கப்பட்டு இருக்கக்கூடாது. “அவர்களைத் தண்டித்து நாடு முழுக்க அது தெரியும்படி செய்து இருக்கக்கூடாது. இது இஸ்லாம் குறித்து தவறான எண்ணத்தை உண்டுபண்ணும் என்பது அரசாங் கத்தின் கருத்தாகும்,” என டாக்டர் மகாதீர் கூறினார்.