அறுவகை இணையப் பாதுகாப்புமுறை பரிந்துரை

சிங்கப்பூரில் உள்ள நிதி நிறுவனங் களுக்கான இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் நாணய ஆணையம் திட்டமிட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் அவற்றின் தகவல் தொழில்நுட்ப முறையைப் பாதுகாக்க ஆறு வகை இணையப் பாதுகாப்பு நடவடக்கைகளை ஆணையம் பரிந்துரை செய் துள்ளது. ஆணையத்தில் தற்போது நடப்பில் இருக்கும் தொழில்நுட்ப அபாய நிர்வாக வழிகாட்டி நெறி முறைகளின் ஒரு பகுதியாக இந்த ஆறு வகை நடவடிக்கைகளும் உள்ளன. அவற்றை இனி சட்ட ரீதியாகக் கட்டாயமாக்க ஆணையம் பரிந் துரைக்கிறது. தற்போது அதிகமான நிதித் துறை செயல்முறைகள் இணையம் வழி நடைபெறுகின்றன. அதே நேரத்தில் இணையம்வழி தாக்குதல்களும் அதிகரித்து உள்ளன.

பாதுகாப்பு அம்சங்களில் உள்ள குறைபாடுகளை உடனடியாக எதிர்கொள்வது, வலிமைமிக்க பாதுகாப்புமுறைகளை நடைமுறைப் படுத்துவது, இணைய இணைப்பு களைப் பாதுகாப்பானதாக்க பாதுகாப்பு சாதனங்களைப் பயன் படுத்துவது, இணையம்வழி தாக்குதலைத் தடுக்க அதற்கான மென்பொருளைப் பயன்படுத்துவது, நிதி நிறுவனங்களின் இணையக் கட்டமைப்புகளை மாற்றி அமைக் கும் கட்டமைப்பு நிர்வாகிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்து வது, முக்கிய நடவடிக்கைகளின் போது இணையக் கட்டமைப்பு நிர்வாகியின் அடையாளத்தை உறுதி செய்யும் முறையை மேலும் வலுப்படுத்துவது ஆகிய ஆறு நடவடிக்கைகளை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.