சுடச் சுடச் செய்திகள்

செட்டி மலாக்கா சமூகம் கண்காட்சி துவக்கம்

வைதேகி ஆறுமுகம்

செட்டி மலாக்கா சமூகத்தின் 400 ஆண்டு வரலாற்றையும் கலாசாரத் தையும் பிரதிபலிக்கும் கண்காட்சி யும் கலாசார விழாவும் இந்திய மரபுடைமை நிலையத்தில் நேற்று தொடங்கின. அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை அதிகார பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இவை இரண்டையும் இந்திய மரபுடைமை நிலையமும் சிங்கப்பூர் இந்திய பெரானாக்கான் (செட்டி மலாக்கா) சங்கமும் முதன் முறையாக இணைந்து வழங்கு கின்றன. இந்தியாவிலிருந்து மலாக்காவிற்குக் குடியேறி, உள்ளூர் மலாய், சீன வம்சாவளியைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்த தமிழ் வணிகர்களின் சந்ததியர்தான் செட்டி மலாக்கா சமூகத்தினர்.

செட்டி மலாக்கா சமூகத்தினர் பெரும்பாலும் இந்து சமய முறைப்படி இறைவழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பேசும் மொழி மலாய், சீன, தமிழ் ஆகிய மொழிகளின் கலவையாகும். வேலை, வணிகம் போன்ற காரணங்களினால் சிங்கப்பூருக்கு வந்த செட்டி மலாக்கா சமூகத் தினரின் எண்ணிக்கை தற்போது 5,000ஐ எட்டியுள்ளது. அவர்களில் ஒருவர் 68 வயது திருவாட்டி ஜெயலட்சுமி குருசாமி. இவர் பாரம்பரிய செட்டி மலாக்கா குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட போதிலும், செட்டி மலாக்கா கலாசாரத்தை இவர் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.

செட்டி மலாக்கா சமூகத்தினரின் பாரம்பரிய உடைகளை அணிந்திருக்கும் (இடமிருந்து) திரு பொன்னுசாமி கலாஸ்திரி, திரு சனாசி ஃபிலிப்ஸ் ரோய், திரு டேவிட் பொக். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon