அன்வார்: நஜிப்பிடமிருந்து 9.5 மி. ரிங்கிட் அரசு வழக்கறிஞருக்குக் கைமாறியது

கடந்த 2013ஆம் ஆண்டிற்கும் 2014ஆம் ஆண்டிற்கும் இடையில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து வழக்கறி ஞர் முகம்மது ஷஃபீ அப்துல்லா 9.15 மில்லியன் ரிங்கிட் (S$3.15 மி.) பணத்தைப் பெற்றுள்ளார் என அந்நாட்டின் தலைமைச் சட்ட அதி காரி அலுவலகம் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து உள்ளது.

தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி சிட்டி ரகாயு முகம்மது முமஸைனி கையெழுத்திட்ட அந்தப் பிர மாணப் பத்திரத்தைத் தம்முடைய வழக்கறிஞர்கள் பெற்றுக்கொண்ட தாக பிகேஆர் கட்சியின் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராஹிம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 2013 செப்டம்பர் 13ஆம் தேதி யிலும் 2014 பிப்ரவரி 17ஆம் தேதியிலும் ஷஃபீயின் ‘சிஐஎம்பி’ வங்கிக் கணக்கிற்கு இரு காசோ லைகள் செலுத்தப்பட்டன என்று அந்தப் பிரமாணப் பத்திரம் கூறு கிறது.

“ஷஃபீயின் அந்த வங்கிக் கணக்கை முடக்கும்படி சட்ட ரீதியாக உத்தரவு கிடைக்கப்பெற்ற பின் இந்தத் தகவல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்குக் கிடைத்தது,” என்று சிட்டி ரகாயு தெரிவித்துள்ளார். தாம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 2013 ஜூலை முதல் 2015 ஜூலை வரை அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ஷஃபீ செயல்பட்டார் என்று அன்வார் கூறினார். “மேல்முறையீட்டு வழக்கில் முன்னிலையாக ஷஃபீயை அனு மதித்திருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை நான் தொடர் கிறேன்,” என்றார் அன்வார்.