அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர் உட்பட மூவர் பலி

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் உள்ள ஒரு வங்கியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 25 வயது இந்தியர் ஒருவர் உட்பட மூவர் மாண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவனும் போலிசா ரால் சுட்டுக்கொல்லப்பட்டான். துப்பாக்கிச்சூட்டில் கொல்லப் பட்ட இந்தியர், ஆந்திர மாநிலத் தைச் சேர்ந்த பிருதிவிராஜ் கந்தேப்பி என அடையாளம் காணப்பட்டது. சின்சினாட்டியில் உள்ள ‘ஃபிஃப்த் தேர்ட்’ வங்கி யின் தலைமையகத்தில் ஆலோசக ராக அவர் பணியாற்றி வந்ததாக வடஅமெரிக்கத் தெலுங்குச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரது உடலை இந்தியா விற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியது ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த ஒமர் என்ரிக்கே சான்டா பெரெஸ் என்றும் லூவிஸ் ஃபெலிப் கால்ட்ரன், 48, ரிச்சர்ட் நியூகமர், 64, ஆகியோர் இச்சம்பவத்தில் மாண்ட மற்ற இருவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் மொத்தம் ஐவர் மீது துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததாகக் கூறப்பட்டது.