மோட்டார்சைக்கிள் - பந்தய கார் மோதிய விபத்தில் மூவர் காயம்

யூனோஸ் லிங்க் - காக்கி புக்கிட் அவென்யூ 1 சந்திப்பில் பந்தய கார் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டன. நேற்று முன்தினம் நண்பகல் 12.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பந்தய காரை ஓட்டிச் சென்ற 50 வயது ஆடவரும் 51 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டியும் பின்னால் அமர்ந்து சென்ற 43 வயதுப் பெண்ணும் காயமடைந்தனர். அவர்கள் மூவரும் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று போலிஸ் தெரிவித்தது. யூனோஸ் லிங்க்கில் அந்த கார் சென்றுகொண்டிருந்தது என்றும் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் வலப்புறம் திரும்பியபோது இரண்டும் மோதிக்கொண்டன என்றும் அறியப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது. மோட்டார்சைக்கிளில் சென்ற இரு பெண்களும் சிராய்ப்புடன் தப்பியதாகக் கூறப்பட்டது. படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட்