ஹைட்ரோ கார்பன் திட்டம்: தலைவர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: மத்திய, மாநில அரசு கள் இணைந்து அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது உண்மை யாகி உள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (படம்) தெரி வித்துள்ளார். மாநில அரசின் அனுமதி இல்லாமல் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட் டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளித் திருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட் டின் துயரம் மறைவதற்குள், அங்கு ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து வரும் அதே வேதாந்தா நிறுவ னத்துக்கு மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் இடங்களை மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடக்குவ தில் மத்திய பாஜக அரசும், தமிழ கத்தில் உள்ள அதிமுக அரசும் உறுதுணையாக இருந்தது உறுதி யாகி உள்ளதாக தெரிவித் துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: இபிஏ

22 Feb 2019

‘வாய்ப்புகள் நிறைந்த நாடு இந்தியா’