உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் சவுரப் சௌத்ரி

சாங்வான்: தென்கொரியாவின் சாங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் வெற்றியாளர் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 10 மீட் டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சவுரப் சௌவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார். சவுரப் சௌவுத்ரி 245.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். கொரிய வீரர் லிம் ஹாஜின் 243.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா 218 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கமும் வென்ற னர். முன்னதாக நடந்த அணி களுக்கான போட்டியில் சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் சீமா, அன்மோல் ஜெயின் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். பதினாறு வயது நிரம்பிய சவுரப் சவுத்ரி அண்மையில் நடந்து முடிந்த ஆசிய விளையாட் டுப் போட்டியிலும் தங்கம் வென் றது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இதுவரை மன்னார் கல்லறைப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வுப் பணியின்போது கிடைக்கப்பெற்ற 300க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 23 எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையது என்று அகழ்வுப் பணிக்கு பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்

17 Jan 2019

மன்னாரில் 300 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே (இடமிருந்து மூன்றாவது) முன்வைத்த பிரெக்சிட் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஏற்க மறுத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

17 Jan 2019

சூடுபிடிக்கும் பிரெக்சிட் விவகாரம்