பெண்ணியம் பெருமை சொல்லும் நடனம்

வைதேகி ஆறுமுகம்

நடனம், இசைக்கச்சேரி, நாடகம் எனப் பலதரப்பட்ட கலைகளின் விருந்தாக அமையவிருக்கிறது சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் கலைவிழா 2018. 'இஃப் வீ டிரீம்,' (if we dream) எனும் கருப்பொருளைக் கொண்டுள்ள இவ்வாண்டின் கலைவிழா நேற்றி லிருந்து இம்மாதம் 23ஆம் தேதி வரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக கலைகள் மையத்தின் 25வது நிறைவு ஆண்டு விழாவை முன்னிட்டு நடை பெறவிருக்கும் இவ்விழா மக்களைக் கவரும் வண்ணம் பலதரப்பட்ட அங்கங்களைக் கொண்டுள்ளது. இவ்விழா நடனம், இசை, கண்காட்சி ஆகிய 25க்கும் மேற்பட்ட அங்கங் களைக் கொண்டிருக்கிறது. இதில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் தற்போதைய மாணவர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் மற்றும் அனைத்துலக அளவிலான கலைஞர் களும் பங்கெடுக்கவிருக்கிறார்கள்.

அந்த வகையில் 40வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய நடனக் குழு, ‘மாயா யாத்ரா’ எனும் நடனத்தை மேடையேற்ற இருக்கிறது. கலாசார விருது பெற்ற பிரபல நடன இயக்குநர் சாந்தா பாஸ்கருடன் இணைந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகப் புவியியல் பிரிவைச் சேர்ந்த விரிவுரையாளர் டாக்டர் கமலினி இராமதாஸ், 46, இந்த நடன அங்கத்தைத் தயாரித்துள்ளார்.

இது இம்மாதம் 15ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலாசார மன்ற அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. ஆண்கள் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுக்கும் பாரம்பரியம் கொண்ட சமுதாயத்திலிருந்து வரும் பெண் ஒருவர் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அவற்றை அவர் எவ்வாறு சமாளித்து வாழ்க்கையில் முன்னேறு கிறார் என்பதை பற்றியும் இந்த நாட்டிய நிகழ்ச்சி நமக்குக் காட்டவிருக்கிறது. பெண்ணியத்தைக் கருப்பொரு ளாகக் கொண்ட இந்த நடனம் சீதா சுயம்வரம் உள்பட ஆறு கதைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எந்தவித பிழையும் இல்லாமல் இந்த அங்கத்தைச் சிறப்பாக அமைக்க குழுவிலுள்ள ஏறத்தாழ 20 நடனமணிகள் கிட்டத்தட்ட 9 மாதங் களாகப் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

நடனச் சுவை வழங்கவிருக்கும் நடனமணிகள். படம்: என்யுஎஸ் கலைகள் மையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தவில், ஹர்மோனியம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு இசையோடு கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் அலக்ஸாண்டர்.

18 Apr 2019

இசைச்சுவையுடன் நகைச்சுவை