மகாதீர்: குறைந்தபட்ச சம்பளத்தை அதிகமாக உயர்த்த முடியாது

கோலாலம்பூர்: மலேசியாவின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டே தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 1,050 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 1,500 ஆக உயர்த்தப்பட வேண் டும் என்று பலர் வலியுறுத்தி வந்த நிலையில் திரு மகாதீர் 50 ரிங்கிட் மட்டுமே உயர்த்தியுள்ளார். இதை தற்காத்துப் பேசிய திரு மகாதீர், பலர் கேட்டுக்கொண்டது போல குறைந்தபட்ச சம்பளத்தை 1,800 ரிங்கிட்டாகவோ அல்லது 1,500 ரிங்கிட்டாகவோ உயர்த்து வது சாத்தியம் இல்லை என்று அவர் கூறினார். நாட்டின் கடனையும் அதற்கான அதிக வட்டியையும் கட்டுவதற்கே பணம் போத வில்லை என்றும் இந்நிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிக அளவு உயர்த்துவது சிரமம் என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தனியார் துறை ஊழியர்கள் மாதத்திற்கு குறைந்த பட்சமாக 1,050 ரிங்கிட் சம்பளத்தைப் பெறுவர்.