பிரேசிலில் முன்னணி அதிபர் வேட்பாளருக்கு கத்திக்குத்து

ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னணி அதிபர் வேட்பாளர் ஜயர் போல்சனரோ கத்தியால் தாக்கப்பட்டார். தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராய்ஸ் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தின் போது தீவிர வலதுசாரி அரசி யல்வாதியான ஜயர் போல்சன ரோ கத்தியால் தாக்கப்பட்டார்.

தாக்குதலில் அவரது கல்லீரல் மற்றும் குடலில் ஏற்பட்ட காயங் களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் கூறினர். தன்னுடைய நிலைபாடுகளால் பிரேசிலில் பலரையும் சின மடையச் செய்த சர்ச்சைக்குரிய இந்த அரசியல்வாதி, அண்மைய கருத்துக் கணிப்புகளில் மக்களின் வலுவான ஆதரவைப் பெற்றிருந்தார்.

அதிபர் தேர்தலில் போட்டி யிடுவதற்கான தடையை மாற்றும் முயற்சியில் முன்னாள் அதிபர் லூலா டி சில்வா தோல்வி யடைந்தால், அடுத்த மாதம் நடைபெறுகின்ற அதிபர் தேர்தலில் ஜயர் போல்ச னோருக்கு அதிக வாக்குகள் கிடைக்கலாம் என கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

பிரேசிலில் அதிபர் வேட்பாளர் ஜயர் போல்சனரோ கத்தியால் தாக்கப்பட்டதும் அவரைக் காப்பாற்ற அவரது ஆதரவாளர்கள் அவரை மேலே தூக்கினர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

94 வயதிலும் சாவகாசமாக குதிரை சவாரி செய்த டாக்டர் மகாதீர். படம்: இணையம்

16 Sep 2019

புகைமூட்டம் சூழ குதிரை சவாரி செய்த மலேசிய பிரதமர்

அரசாங்க தலைமை யகத்திற்கு வெளியே நேற்று பெரும் அளவில் திரண்ட ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைக்க அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசிய போலிசார். படம்: ஏஎஃப்பி

16 Sep 2019

ஹாங்காங்கில் மீண்டும் வன்முறை