‘விஜய் சேதுபதி என்றாலே விசில்தான்’

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா, அதர்வா, ரா‌ஷி கண்ணா, அனுராக் கஷ்யப் நடித் துள்ள இந்தப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து உள்ளார். அஜய் ஞானமுத்துவின் இரண் டரை ஆண்டுக்கால உழைப்பின் பலனுக்குக் கிடைத்த வெற்றியை கொண்டாடும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பேசிய அஜய் ஞான முத்து, “நானும் அதர்வாவும் நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இந்தப் படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டோம். ‘ருத்ரா’ கதாபாத்தி ரத்தைப் பற்றிப் பேசும்போது, பெரிய நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாமா என்ற பேச்சு எழுந்தது.

“ஆனால், அவர்கள் சாயல் படத்தில் வந்துவிடுமே என்று பயந்தேன். “அதனால்தான் அனுராக் சாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். பார்த்தவர்கள் அனை வரும் பாராட்டும்போதுதான் என் முடிவு பற்றி மகிழ்ச்சியாக இருக்கி றது. அவருக்கு பின்னணி குரல் பேசவைக்க மகிழ்த்திருமேனி சாரைக் கேட்டோம். 12 நாட்கள் மிகவும் பொறுமையாக பேசிக் கொடுத்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்