பலருக்கு பக்குவமில்லை என்கிறார் சதா

நடிகர், நடிகைகளின் நடிப்பைக் கதாபாத்திரங்களாகப் பார்க்கும் பக்குவம் பலருக்கு இல்லை என்று கூறியுள்ளார் ‘டார்ச் லைட்’ படத்தின் நாயகி சதா. பாலியல் தொழிலாளி பற்றிய இக்கதையை விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கி உள்ளார். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இதன் நாயகி சதா பேசும்போது, “நான் சற்று இடை வெளிக்குப் பின் தமிழில் நடித்தி ருக்கிறேன். “நல்லதொரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பிய தால் இந்தத் தாமதம் நேர்ந்தது. “டார்ச் லைட் படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார். கதை பிடித்தது. ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. சரியாக வருமா? நம்மால் முடியுமா என்கிற தயக்கம் இருந்தது.

“இயக்குநர் தான் எனக்கு ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவெடுத்துவிட்டேன். “இது மாதிரி பாலியல் தொழி லாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள். காரணம் படத்தின் பாத்திரத்தைப் பாத்திர மாகப் பார்க்கும் பக்குவம் பலருக் கும் இருப்பதில்லை. “அதுதான் பிரச்சினை. என்னைப் பார்க்கிறவர்கள் எல்லா ருமே முதலில் இதைத்தான் கேட் கிறார்கள். “என்னை படத்தில் சதாவாக பார்க்காதீர்கள். பாத்திரமாகப் பாருங்கள் என்பதே என் பதில். “முன்னோட்டக் காட்சியைப் பார்த்துவிட்டு அதில் சில வினாடிகள் வரும் வசனங்கள் பற்றிக் கேட்கிறார்கள். சர்ச்சைகள் எழுப்புகின்றனர். “முன்னோட்டத்தை மட்டும் பார்த்து முடிவு செய்யாதீர்கள். படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்