அதிவேக ரயில் திட்ட ஒப்பந்தம் ஒத்துழைப்பின் அடையாளம்

கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் சுமார் ஈராண்டுகளுக்கு ஒத்திவைக்- கப்பட்டிருப்பது ஏமாற்றமளித்தாலும், இந்தத் திட்டத்தை ஒத்தி வைக்கும் முடிவு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் நலனையும் கருத்தில் கொண்டுள்ளது.

மலேசியாவின் சூழ்நிலையில், புதிய அர- சியல் தலைமைத்துவம் நாட்டின் கடனால் பெருந்திட்டங்களைத் தீர பரிசீலிக்க வேண்டிய நிலைமைக்கு உள் ளானது. அண்டை நாடான சிங்கப்பூர், மலேசி யாவின் இக்கட்டுகளினால் பாதிப்படைவதைத் தவிர்க்க முடியாது. இரு தரப்புக்கும் பலனளிக்கும் உறவை மலேசியா- வுடன் நிலை நாட்ட சிங்கப்பூர் விரும்புகிறது. ஆனால், மலேசியா தோல்வியடைந்தால், இத்தகைய உறவை நிலைநாட்ட இயலாது.

ஆனால், சிங்கப்பூரும் அதன் நலனைச் சீர்தூக்கி நிலைநிறுத்தவேண்டும். கூட்டுத் திட்டப்பணி களில் பொது நிதி எவ்வாறு முத- லீடு செய்யப்படுகிறது என்பதும் இதில் உள்ள டங்கும்.

இவ்வாரம் கையெழுத்தான ஒப்பந்தம், மாற்ற முடியாத இருதரப்பு உறவைச் சீர்தூக்கி நிலைநிறுத்துகிறது. அதிவேக ரயில் திட்டம் ஒத்திவைக்கப்படும் ஈராண்டு காலத்தில் மலேசியா அதன் நிதிநிலையைச் சீரமைக்க கால அவகாசம் கிடைக்கும்.

இதன்வழி, இந்தத் திட்டப்பணி ஒருவேளை தொடரக்கூடும். இதற்கிடையில், ஒத்திவைப்பி- னால் ஏற்படும் செலவுகளுக்காக சிங்கப் பூ ருக்கு $15 மில்லியன் தருவதற்கும் மலேசியா இணங்கி இருக்கிறது.

சட்டப்படி, திட்டப்பணி ஈராண்டு களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கா விட்டால், முழு இழப்பீட்டுத் தொகையை மலேசியா தந்தாக வேண்டும்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்குள் அதிவேக ரயிலின் கட்டுமானப் பணி மீண்டும் தொடங் காவிட்டால் இந்தத் திட்டப்பணி ரத்து செய்யப்பட்டு விட்டதாகக் கருதப்படும். இந்தக் கால அவகாசம் முக்கிய- மானது. ஏனெனில், எந்தவொரு வர்த்தகத் திட்டப்பணியையும் காலத்திட்டமின்றி விட்டு- வைக்க முடியாது. இருதரப்பினரும் காலக் கெடுவை நிர்ண யித்தால்தான் பணியை மேற் கொள்வதற்கான முனைப்புகளில் கவனம் செலுத்த முடியும்.

மேலும், எதிர்காலத்திற்குள் எந்த அள வுக்குச் செல்கிறோமோ, அந்த அளவுக்கு நிதிக் கணிப்புகளும் நிச்சயமற்றவையாகி- விடும். எனவே, அதிவேக ரயில் திட்டம் நிறைவேறுமா இல்லையா என்பதை நிர்ண- யிப்பதற்கான காலக்கெடுவைத் தீர்மானிப்பது முக்கியம். அதிவேக ரயில் திட்ட ஒப்பந்தத்தில் திட்டப்பணியை நிறுத்திவைப்பது பற்றி குறிப்- பிடப்படாத போதிலும், திட்டப்பணியைப் பரி சீலிக்க சிங்கப்பூர் இணங்கியது. இருதரப்- புக்கும் இடையிலான ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூர் இவ்வாறு செய்தது.

சிங்கப்பூரின் இந்தச் செய்கை எந்த அளவுக்கு அங்கீகரிக்கப்பட்டு நினைவில் கொள்ளப்படும் என்பதைப் பொறுத்திருந்து- தான் பார்க்கவேண்டும். ஏனெனில், அண்டை வீட்டார்களுக்கு இடையில் நடப்பதைப் போல, சில சமயங்களில் சிரமமான விவகாரங்கள் எழக்கூடும் அல்லது மீண்டும் பெரிது படுத்தப் படக்கூடும்.

மலேசியாவுடன் இவ்வாரம் கையெழுத்தான ஒத்திவைப்பு ஒப்பந்தம், ஆரம்பத்தில் கையெழுத்தான ரயில் திட்ட ஒப்பந்தத்தைப் போலவே சட்டப்படியானதுதான். சிங்கப்பூர் சிறிய நாடாக இருப்பதால், சட்டத்தின் சக்தி ஒரு பாதுகாப்பாகப் பயன்படுகிறது. ஆனால், அண்மை நடப்புகள் காட்டியுள்ளபடி, அனைத்- துலகப் பங்காளி களின் உள்நாட்டு நெருக்கடி களில் மாற் றங்கள் நேரும்போது சிங்கப்பூர் வளைந்து கொடுக்காமல் இருப்பதில்லை.

மலேசியாவுடனான சிங்கப்பூரின் உறவு, இருதரப்பு உறவிலிருக்கக்கூடிய நெருக்கத்- தையும் பரந்த அடிப்படையையும் கொண்டு உள்ளது. புவியியல் அமைப்புமுறை, வரலாறு, பொருளியல், குடும்ப உறவு ஆகியவற்றால் இரு நாடுகளும் ஒன்று மற்றதன் நலனுக்கு இன்றியமையாததாக இருக்கின்றன.

அண்டை நாடுகள் நிதானமடைந்து, பிரச்சி- னைகளைப் பேசித் தீர்க்க முற்பட்டு, ஒருவர் மற்றவரது நலனையும் அக்கறை களையும் கருத்தில் கொள்ளும்போது என்ன வெல்லாம் சாதிக்க முடியும் என்பதை இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது. இரு நாடுகளுமே ஒன்று மற்றதன் எதிர்காலத்தில் முதலீடு செய்வதில் தொடர்ந்து கடப்பாடு கொண்டு இருப்பதை இந்த முடிவு குறிக்கிறது. - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்