நுழைவுச் சீட்டு இணைய மோசடிகளின் தொடர்பில் ஆடவர் கைது

இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை விற்று மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் 30 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தேசிய தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், ‘யூனிவர்சல் ஸ்டூடியோ சிங்கப்பூர்’, விமானச் சீட்டுகள் போன்றவற்றுக்காக இந்த மோசடியில் பாதிக்கப்பட்டோர் அவரிடம் பணம் செலுத்தியிருந்தனர். இவ்வாண்டு பிப்ரவரி, ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்த மோசடி குறித்து போலிசிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. வங்கியில் பணம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆடவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை எனப் பாதிக்கப்பட்டோர் கூறியிருந்தனர். அந்த சந்தேக ஆடவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த சில கைபேசிகள், சிம் அட்டைகள், கைக்கணினி, மடிக்கணினி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.