பிலிப்பீன்சில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் நிலநடுக்கம்

மணிலா: பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியை நேற்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக் கியதாக அதிகாரிகள் தெரிவித் தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகளில் பல பொருட்கள் அலமாரிகளிலிருந்து கீழே விழுந்ததால் மக்கள் அலறியடித்து ஓடியதாக குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் பற்றிய உடனடித் தகவல் எதுவும் தெரியவில்லை. பிலிப்பீன்சில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. 2017ம் ஆண்டு பிலிப்பீன்சில் ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.