அனைத்து சீனப் பொருட்களுக்கும் வரி; டிரம்ப் மிரட்டல்

வா‌ஷிங்டன்: சீனாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி விதிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா ஏற்கெனவே 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட் களுக்கு வரி விதித்துள்ளது. அத்துடன் மேலும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு வரி விதிக்கவிருப்பதாக திரு டிரம்ப் அறிவித்துள்ளார். வெகு விரைவில் புதிய வரி விதிப்பு நடப்புக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 267 பில்லியன் அமெரிக்க டாலர் (S$367 பில்லியன்) மதிப்புள்ள பொருட் களுக்கு வரி விதிக்கப் போவதாக திரு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். திரு டிரம்ப்பின் இந்த ஆகக் கடைசி மிரட்டல், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்கா வரி வசூலிக்க வழிவிடும் என்று தெரிகிறது.