லொம்போக்கில் பலருக்கு மலேரியா காய்ச்சல்

ஜகார்த்தா: அடுத்தடுத்து உலுக் கிய நிலநடுக்கங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தோனீசியாவின் லொம்போக் தீவில் தற்போது மலேரியா காய்ச்சல் வெகுவாக பரவி வருவதாக மேற்கு லொம்போக் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுற்றுலாத் தீவான லொம்போக் கில் உள்ள நான்கு வட்டாரங்களில் சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 103 பேருக்கு மலேரியா காய்ச்சல் தொற்றியிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் கூறி யுள்ளார்.

மலேரியா காய்ச்சலால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவ தாகவும் இதனால் அக் காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள குனங்சாரி வட்டாரம் தொற்று நோய் பரவும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மேற்கு லொம்போக் சுகாதார அமைப்பின் தலைவர் ரஹ்மான் சனன் கூறினார். அப்பகுதியில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இந்தோனீசியாவின் லொம்போக் தீவில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் அவர்களின் குடும்பத்தினரும் தங்கியுள்ளனர். படம்: ஏஎஃப்பி