இறுதிச் சுற்றில் மோதும் ஜோக்கோவிச், டெல் போட்ரோ

நியூயார்க்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெ ரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான இறுதிச் சுற்றுக்கு செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சும் அர்ஜெண்டினாவின் டெல் போட் ரோவும் தகுதி பெற்றுள்ளனர். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றி யாளரும் உலகின் முதல் நிலை வீரருமான ஸ்பெயினின் ரஃப யேல் நடாலும் மூன்றாம் நிலை வீரரும் 2009ஆம் ஆண்டு வெற்றியாளருமான டெல்போட் ரோவும் மோதினர்.

இந்த ஆட்டத்தின்போது நடாலின் வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் பாதியில் விலகினார். எனவே, டெல் போட்ரோ வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொர் அரையிறுதியில் ஜோக்கோவிச்சுக்கும் ஜப்பானிய வீரர் கெய் நி‌ஷிகோரிக்கும் இடையே பலப் பரீட்சை நடந்தது. இதில் ஜோக்கோவிச் 6=3, 6=4, 6=2 எனும் நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியில் இரண்டு முறை வெற்றியாளர் பட்டம் வென்றுள்ள ஜோக்கோவிச், இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை எதிர்கொள்ள உள்ளார். இப்போட்டியில் ஜோக்கோவிச் வெற்றியாளர் பட்டம் வென்றால் அமெரிக்காவின் முன்னாள் நட்சத்திர வீரர் பீட் சாம்ப்ராசின் 14 கிராண்ட் ஸ்லாம் விருதுகளை வென்று படைத்த சாதனையை சமன் செய்வார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது