எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 17ஆம் தேதி தீர்ப்பு

சென்னை: பதினெட்டு அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய் யப்பட்டது தொடர்பான வழக்கில் வெளிவரும் தீர்ப்பு தமிழக அரசியல் களத்தைப் புரட்டிப் போட வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப் பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு டிடிவி தினக ரனுக்கு ஆதரவாக அணி திரண்ட அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் அன்றைய ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து, முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனி சாமியை நீக்கவேண்டும் என மனு அளித்தனர்.

இதையடுத்து ஆளுநரை தனி யாகச் சந்தித்தது ஏன்? என்று கேட்டு 19 பேருக்கும் அதிமுக சட்டப்பேரவைக் கொறடா ராஜேந் திரன் நோட்டீஸ் அனுப்பினார். அவர்களில் எம்எல்ஏ ஜக்கையன் மட்டும் உரிய விளக்கத்தை அளித்ததை அடுத்து அவரைத் தவிர மற்ற 18 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதாக சபா நாயகர் தனபால் அறிவித்தார். இதை எதிர்த்து 18 எம்எல்ஏக்க ளும் உயர் நீதிமன்றத்தை அணுகி னர். இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தது.

எனினும் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என அறிவிக்கப்பட் டது. அதன்படி நீதிபதி சத்யநாரா யணன் இவ்வழக்கை விசாரித்து முடித்துள்ளார். அவர் தீர்ப்பை ஒத்திவைத் துள்ள நிலையில் அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மற்ற அரசியல் கட்சிகளும் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன.