பெண் போலிசை மிரட்டிய ரவுடிக்கு வலைவீச்சு

தேனி: காவல்துறை பெண் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் புல்லட் நாகராஜன் என்பவரைப் பிடிக்க மதுரை போலிசார் தனிப்படை அமைத்துள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புள்ள ரவுடி என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை சிறைத் துறை கண்காணிப்பாளரான ஊர்மிளாவை வாட்ஸ்அப் மூலம் புல்லட் நாகராஜன் மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. மதுரை சிறையில் உள்ள கைதிகளைப் போலிசார் தாக்குவதாகவும், தலைமைக் காவலர் ஒருவர் கைதிகளுக்காக சிறைக்குள் கஞ்சா கடத்துவதாகவும் குறிப் பிட்டுள்ள புல்லட் நாகராஜன், இதே போக்கு நீடித்தால் போலி சாரை சும்மா விடப்போவதில்லை என எச்சரித்துள்ளார்.

“இனிமேல் புகார் வந்தால் சும்மா விடமாட்டேன். என் ஆட் கள் ஏதாவது செய்துவிடுவார் கள்,” என்று வாட்ஸ்அப் மூலம் புல்லட் நாகராஜன் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு வலை வீசப்பட்டுள்ளது. 2