முழு அடைப்பு: தமிழக எதிர்க்கட்சிகள் பலவும் பங்கேற்பதாக அறிவிப்பு

அரியலூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் அதிமுகவைத் தவிர மாநிலத்தில் உள்ள ஏனைய பெரும்பாலான கட்சிகள் பங்கேற்க உள்ளன. இது தொடர்பாக செய்தியாளர் களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்தி ருப்பதாகத் தெரிவித்தார்.

பாமக தலைவர் ஜி.கே. மணி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசியதாகக் குறிப்பிட்ட அவர், போராட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகி களுடன் ஆலோசித்து இருவரும் முடிவைத் தெரிவிக்க இருப்பதாகக் கூறினார். நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் அனைத்து மாவட்டங்க ளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் திருநாவுக்கரசர் கூறினார். வணிகர் அமைப்புகள் அனைத் தும் கடைகளை அடைப்பதாக உறுதி அளித்துள்ளன என்றார் அவர்.

பொதுமக்களின் பொருளா தாரச் சுமையைக் குறைக்க நடத்தப்படும் போராட்டத்துக்கு மக்களும் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று திருநா வுக்கரசர் குறிப்பிட்டார். காங்கிரஸ் விடுத்த அழைப்பை ஏற்று முழு அடைப்புப் போராட் டத்தில் பங்கேற்பதாக திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பலவும் அறிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!