தீபாவளிக்கு விஜய், தனு‌ஷின் படங்கள்

தீபாவளி என்றால் பலகாரங்களும் புத்தாடைகளும்தான் மனதில் முத லில் தோன்றும். அதேவேளையில் சிலருக்கு கோயிலுக்குச் செல்ல வும் நல்ல திரைப்படங்களைப் பார்க்கவும் ஒரு இனம்காணாத ஆவல் பிறக்கும். இந்த ஆசைக்கு தீனி போட வருகிறது விஜய், தனுஷ் நடித் துள்ள படங்கள். தீபாவளி பண்டிகையின்போது விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் வெளி யாவது உறுதியாகி உள்ளது. அதேபோல் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சூர்யாவின் ‘என்ஜிகே’ ஆகிய படங்களையும் தீபாவளிக்கு திரை யிடத் திட்டமிட்டனர். ஆனால் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பின்போது திரையுலகினர் வேலை நிறுத்தம் செய்ததால் படத்தின் வெளியீடு பொங்கலுக்குத் தள்ளிப்போய் உள்ளது. இது அஜித் ரசிகர் களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது. சூர்யாவின் ‘என்ஜிகே’ படப் பிடிப்பும் இயக்குநர் செல்வராக வனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சில வாரங்கள் முடங்கியது. இதனால் அந்தப் படமும் தீபாவளி போட்டியில் இருந்து விலகிக்கொண்டது.

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ காட்சியில் தனுஷ், மேகா ஆகாஷ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்