மலேசிய விரைவுச்சாலையில் பேருந்து விபத்து: சிங்கப்பூர் திரும்பிய மூவர் பலி, 14 பேர் காயம்

மலேசிய நெடுஞ்சாலையில் ஒரு சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரி ஒன்றின் மீது மோதியதில் மூன்று பேர் உயிரி ழந்தனர். இதர 14 பேர் காயம் அடைந்ததாக சைனா பிரஸ் செய் தித்தாள் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் 25 பயணிகள் இருந்தனர். ஓட்டு நர்கள் இரண்டு பேர் இருந்தனர். அந்தப் பேருந்து கோலாலம் பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்தபோது வடக்கு =தெற்கு விரைவுச்சாலையில் விடி காலை சுமார் 1.30 மணிக்கு விபத்துக்கு உள்ளாகிவிட்டது.

விபத்தில் சிக்கிய லாரியில் இரும்புக் கம்பிகள் இருந்தன என்றும் சைனா பிரஸ் கூறியது. விபத்தில் சிக்கிய பேருந்து கிராஸ் லேண்ட் எக்ஸ்பிரஸ் நிறு வனத் திற்குச் சொந்தமானது என்று தெரிகிறது. பேருந்துடன் மோதிய லாரி யில் ஏற்றப்பட்டு இருந்த இரும்புக் கம்பிகள் விபத்து நிகழ்ந்ததும் பேருந்தை துளைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்ததாகவும் சைனா பிரஸ் செய்தித்தாள் குறிப்பிட்டு இருக்கிறது. இந்த விபத்தில் மாண்டுவிட்ட மூவரில் ஒருவர் பெண். லாய் வென்சிங் என்ற அந்த 25 வயது மலேசிய மாது சிங்கப்பூர் நிரந்தர வாசியாக இருந்தார் என்றும் அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது. மாண்டவர்களில் இதர இரண்டு பேரும் சீனர்கள். அவர் களில் ஒருவர் 61 வயது ஆண். மற்றொருவர் 40 வயது பெண். இவர்கள் யார் என்பது இன்னமும் தெரியவில்லை.

கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்த பேருந்து மலேசியாவில் வடக்கு=தெற்கு விரைவுச்சாலையில் நேற்று விடிகாலை விபத்துக்குள்ளாகிவிட்டது. படம்: சைனா பிரஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!