மாதர், சிறார்களை மேலும் பாதுகாக்க பல பரிந்துரைகள்

சிங்கப்பூரில் மாதர்களையும் சட்டப்படி வயது குறைந்த சிறார்களையும் எளிதில் பாதிக் கக்கூடிய நிலையில் இருப்போரையும் மேலும் பாதுகாக்க பரந்த அளவிலான யோசனைகளை குற்றவியல் தண்டனைச் சட்ட மறுபரிசீலனைக் குழு முன்வைத்து இருக்கிறது. அந்தப் பரிசீலனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் வன்செயல்கள், பாலியல் கொடுமைகளிலிருந்து இத்தகைய பிரிவினர் களுக்குச் சட்டப்படி அதிக பாதுகாப்பு கிடைக்க வழி ஏற்படும். குற்றவியல் தண்டனைச் சட்டத்தை பரந்த அளவில் மறுபரிசீலனை செய்வதற்காக 2016ல் அமைக்கப்பட்ட இந்தக் குழு, மண மான கணவன், மனைவியின் சம்மதம் இன்றி அவருடன் பாலியல் தொடர்புகொள் வதைக் சட்டப்படி குற்றமாக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது.

அதோடு, தற்கொலை முயற்சியை குற்றச் செயலாகக் கருதக்கூடாது என்றும் இந்தக் குழு பரிந்துரைக்கிறது. சட்டப்படி வயதுக்கு வராத சிறார்களை காமுகர்களிடமிருந்து மேலும் பாதுகாக்க பல மாற்றங்களை குழு பரிந்துரைத்து இருக்கிறது. சிறார்கள், பணிப்பெண்கள், மன, உடல் குறைபாடுகளுடன் கூடிய பெரியவர்கள் ஆகியோருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றச்செயல்களுக்கு அதிக தண்டனை வேண்டும் என்று குழு கோரிக்கை விடுத்து இருக்கிறது. 169 பரிந்துரைகள் குற்றவியல் தண்டனைச் சட்ட மறுபரிசீல னைக் குழு மொத்தம் 169 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

மற்றவர்களின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிடுவது, நிர்வாண அல்லது ஆபாச படங்களைப் பரப்புவது போன்ற புதிய வகை குற்றச்செயல்களைச் சமாளிக்கும் வகையில் குற்றவியல் தண்டனைச் சட்டம் புதிய சட்டங் களைக் கொண்டிருக்கவேண்டும் என்பதும் அந்தப் பரிந்துரைகளில் அடங்கும். ஆணும் ஆணும் பாலியல் தொடர்பு கொள்வதைக் குற்றம் என்று குறிப்பிடும் 377ஏ பிரிவு இந்தக் குழுவின் மறுபரிசீல னையில் இடம்பெறவில்லை என்பது குறிப் பிடத்தக்கது. குற்றவியல் தண்டனைச் சட்ட மறுபரிசீலனைக் குழு பரந்த ஐந்து பிரிவுகளை உள்ளடக்கி தன்னுடைய பரிந்துரைகளைச் செய்து இருக்கிறது.