தலையில் துப்பாக்கிச்சூட்டு காயமடைந்த தேசிய சேவையாளர் மரணம்

கடந்த வாரம் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் காணப்பட்ட முழுநேர காவல்துறை தேசிய சேவையாளர் நேற்று உயிரிழந்தார். உலு பாண்டான் ரோட்டில் உள்ள பாதுகாப்பு தளபத்திய அலு வலகத்தில் கடந்த திங்கட்கிழமை அந்த 23 வயது தேசிய சேவை யாளர் காயமுற்றிருந்ததாக காவல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அன்று காலை 8 மணிக்கு வேலைக்கு வந்த அவர் ஆயுதப் பாதுகாப்பறையிலிருந்து தமது சேவைக்குப் பயன்படும் கைத் துப்பாக்கியை எடுத்துச் சென்ற தாகக் கூறப்பட்டது. பிற்பகலில் ஓய்வெடுக்கச் சென்ற அவர், 3.20 மணிவாக்கில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் காணப்பட்டதாக அறிக்கை கூறு கிறது. அவரது சேவை கைத்துப்பாக்கி அவரது அருகில் கிடந்தது. தேசிய பல்கலைக்கழக மருத்து வமனைக்குக் கொண்டு செல்லப் பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்தார்.

அவர் காயமடைவதற்கு சற்று நேரம் முன்னால் கைபேசி அல்லது தொலைபேசியில் அவர் யாருடனோ வாக்குவாதம் செய்து கொண்டிருந் ததாக குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய ஆரம்பக் கட்ட விசார ணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் வேலை தொடர் பானதல்ல என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ அறிகிறது. இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தியுள்ள போலி சார், சம்பவத்திற்கான சூழ்நிலை குறித்து கவனத்துடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப் பிட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்