சுடச் சுடச் செய்திகள்

பிரதமர் லீ: மூத்தோருக்கு மேலும் அதிகமான உடற்பயிற்சிக்கூடங்கள்

முதிர்ச்சியடைந்த வீடமைப்புப் பேட் டைகளில் மூத்தோருக்கும் உடற் குறை உள்ளோருக்கும் அதிகமான கட்டுடல் பயிற்சிக் கூடங்கள் கட்டப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். அந்த வகையில் முதல் உடற் பயிற்சிக்கூடம் அடுத்த ஆண்டு மத்தியில் அங் மோ கியோ சமூக மன்றத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அங் மோ கியோ சமூக மன்றத் தில் துடிப்புமிக்க மூதோர்களுக் கான இரவு உணவு விருந்தில் பங்கேற்றுப் பிரதமர் பேசினார். சிங்கப்பூரில் பெரும்பாலும் இதர நகரங்களைக் காட்டிலும் அங் மோ கியோ குடியிருப்புப் பேட்டையில் அதிகமான மூத்தோர் இருப்பதாகக் கூறினார் அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான திரு லீ. எனவே, ஏரோபிக்ஸ், தைஜி, நடனம் போன்ற நடவடிக்கைகளில் பங்ககெடுப்பதன் மூலம் துடிப்புடன் மூப்படைதலை அங் மோ கியோ சமூக மன்றம் ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டார். ஓய்வு பெற்ற பின்னர் மனதளவிலும் உடலள விலும் சுகாதாரத்தைப் பராமரிக்க இந்நடவடிக்கைகள் துணைபுரியும் என்றார் அவர்.

இதற்கிடையே, மூத்தோர் சூழ லில் அமையும் கட்டுடல் பயிற்சிக் கூடங்கள் அமைந்த சமூக மன்றங் களின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஐந்தாக உயரும் என்று ‘ஸ்போர்ட் சிங் கப்பூர்’ எதிர்பார்க்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon