மகுடம் சூடிய முதல் ஜப்பானிய வீராங்கனை

நியூயார்க்: அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியில் நவோமி ஒசாக்கா கிண்ணம் வென்றுள்ளார். இந்தப் பட்டத்தை வென்ற முதல் ஜப்பானிய வீராங் கனை எனும் பெருமை அவரைச் சேரும். நேற்று அதிகாலை நடை பெற்ற இறுதிச் சுற்றில் அமெரிக் காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்சுடன் அவர் மோதினார். இதில் 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார் 20 வயது ஒசாக்கா.

இரண்டாவது செட்டில் எவரும் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்தது. மைதானத்தில் இருந்தவாறு தமது பயிற்றுவிப்பாளரிடமிருந்து ஆலோ சனை பெற்றதாகக் கூறி நடுவர் செரீனாவுக்கு எச்சரிக்கை விடுத் தார். டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டிகளில் பார்வையாளர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து ஆட்டக் காரர்களுக்கு அவர்களது பயிற்று விப்பாளர்கள் ஆலோசனை வழங் கலாம். ஆனால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை. அதுமட்டு மல்லாது, டென்னிஸ் மட்டையை வீசி எறிந்த தற்காக செரீனாவுக்கு எதிராக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்தார்.

இதனால் கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற செரீனா நடுவரை ஒரு பொய்யர் என்றும் திருடர் என்றும் திட்டித் தீர்த்தார். செரீனாவின் இந்தச் செயலுக்காக அவருக்கு எதிராக 'கேம் பெனால்டி' விதிக்கப்பட்டது. இந்தக் கொந்தளிப்புக்கு இடையே செரீனா தொடர்ந்து விளையாடினார்.

இறுதிச் சுற்றில் நேர்செட் கணக்கில் வென்று பட்டம் வென்ற ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாக்கா கிண்ணத்துக்கு முத்தமிட்டுக் கொண்டாடுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!