75 பேருக்கு மரண தண்டனை, 600க்கும் மேற்பட்டோருக்கு சிறைவாசம்

கெய்ரோ: 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்புப் படைகள் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்றதன் தொடர்பில் எகிப்திய நீதிமன்றம் 75 பேருக்கு மரண தண்டனையும் 600க்கும் மேற்பட்டோருக்கு சிறைத் தண்டனையும் விதித்துள்ளது. கெய்ரோவின் ரபா அல் அடாவியா ஸ்குவேர் பள்ளிவாசலில் முஸ்லிம் சகோதரத்துவத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியோரில் பலரைக் கொன்றதற்காகவும் வன்முறையைத் தூண்டியதற்காகவும் இத்தண்டனைகள் விதிக்கப்பட்டன.

எகிப்தின் நீண்டநாள் தலைவர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியைக் கவிழ்த்தபிறகு ஏற்பட்ட 2011 எழுச்சியினால் விளைந்த மிகக் கொடூர சம்பவம் இது. இதனைத் தொடர்ந்து அமைதிக்கான ஆர்ப்பாட்டக்காரர்களையும் செய்தியாளர்களையும் குற்றம் சாட்டியதற்காக மனித உரிமைக் குழுக்கள் வழக்கு விசாரணையைக் குறை கூறியுள்ளன.