நிதியுதவியை ரத்து செய்த டிரம்ப் முடிவால் பாலஸ்தீனர்கள் அதிருப்தி

வா‌ஷிங்டன்: கிழக்கு ஜெரூசல மருத்துவமனைகளில் உள்ள பாலஸ்தீனியர்களின் பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதித் தொகையில் 25 மில்லியன் அமெரிக்க டாலரை (S$35 மில்லியன்) வேறு முக்கிய பணிகளுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திசைதிருப்பியுள்ளதாக மாநில துறை அதிகாரி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அடையாளம் கண்டது, அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ்விலிருந்து ஜெரூசலத்துக்கு இடமாற்றம் செய்தது என டிரம்ப் நிர்வாகத்தின்கீழ் பாலஸ்தீனர்களைத் தனிமைப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பும் பட்டியலில் சேர்ந்துள்ளது. இதற்கிடையில் நிதியை ரத்து செய்தது தொடர்பாகத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் பாலஸ்தீன அகதிகள். இந்த நியாயமற்ற முடிவினால் அமெரிக்கா எல்லை மீறிவிட்டதாகவும் பாலஸ்தீன மக்களுக்கு நேரடியாக எதிர்ப்பைக் காட்டுவதாகவும் அமைச்சு கூறியது.