அரசாங்கம் எங்களைக் கண்காணிக்கிறது : ஜோகூர் இளவரசர்

ஜோகூர்: ரகசிய உளவுத்துறை தொழில்நுட்பத்தைக் கொண்டு மலேசிய அரசாங்கம் தம்மையும் தம் தந்தை ஜோகூர் அரசர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந் தரையும் கண்காணித்து வருவ தாக ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் கூறியுள்ளார். தனிநபர்களைக் கண் காணித்துத் தகவல்கள் சேகரிக் கும் இஸ்ரேல் தயாரிப்பான கண்காணிப்புக் கருவி ஒன்றை வாங்குமாறு நபர் ஒருவர் தம்மை அணுகியதாக நேற்று முன்தினம் இளவரசர் தம் ஃபேஸ்புக்வழி பகிர்ந்துகொண்டார். மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம், போலிஸ் உளவுத்துறை நிறுவனத்தின் சிறப்புப் பிரிவு, தொடர்பு; பன்முக ஊடக ஆணையம், பிரதமர் அலுவலகம் எனப் பல்வேறு மலேசிய நிறுவனங் கள் இதுபோன்ற கண்காணிப்புக் கருவியைப் பயன்படுத்துவதாக அரசாங்க அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக இளவரசர் கூறினார்.

தாம் அரச புரவலராக இருக்கும் ‘ஜெடிட்டி’ காற்பந்து குழுவின் ஃபேஸ்புக் பக்கத்தையும் தம் தனிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தையும் இணைய உளவாளிகள் கண் காணித்து வருவதாகவும் மேலதிகாரிகளை எதிர்க்கும் வகையில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அவர்கள் கண்காணிக் கின்றனர் என்றும் அவர் தெரி வித்தார். இதேபோல் 2016ல் தம் தொலைபேசி உரையாடல்களும் ஒ ட் டு க் கே ட் க ப் ப டு வ தா க வு ம் தம்மைச் சிறப்புப் பிரிவினர் கண் காணித்து வருவதாகவும் இள வரசர் கூறியிருந்தார். மலேசிய போலிசார் தம் மீதும் தம் தந்தை மீதும் விசாரணை தொடங்கியிருப்பதாகவும் கூறி னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் ஆண்டறிக்கையை வாசிக்கும் அதிபர் ஜோக்கோ விடோடோ. படம்: இபிஏ

17 Aug 2019

தலைநகர் இடமாற்றத்திற்கு ஆதரவு கோரும் ஜோக்கோவி

புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகை குண்டைப் பயன்படுத்தினர்.
படம்: ராய்ட்டர்ஸ்

17 Aug 2019

ஹாங்காங் போலிஸ்: சீனா தலையிட வேண்டியதில்லை