பாராட்டு மழையில் நயன்தாரா

நயன்தாரா தமிழ்த் திரையில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக சம்பளத்தை ஏற்றியதாக தகவல் வந்தாலும் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ பட வெளியீட்டின்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்குச் சிக்கல் எழுந்தது. படத்தை வெளியீடு செய்வதற்கு பணப் பிரச்சினைக்கு ஆளானார்.

அப்போது நயன்தாராவுக்கு ரூ.50 லட்சம் சம்பள பாக்கி இருந்து இருந்தது. நயன்தாரா நினைத்திருந்தால் அதை அப்போது கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் நயன்தாரா தயாரிப்பாளரின் நிலைமையைப் புரிந்து அந்தச் சம்பளத்தை கேட்காமல் விட்டுக் கொடுத்தாராம். இந்த செய்தி தமிழ்த் திரையில் பரவ நயன்தாராவுக்குப் பாராட்டு மழை குவிகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்