ஐஸ்வர்யா: என் குடும்பத்துக்கு பணம்தான் முக்கியம்

எனது அம்மாவுக்கும் என் குடும்பத்தினருக்கும் பணம்தான் முக்கியம் என்று நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார். ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா, ‘பாயும் புலி’, ‘ஆறாது சினம்’, ‘சத்திரியன்’, அண்மையில் திரைக்கு வந்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இப்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவர் தன்னிடம் பணம் கேட்டுக் குடும்பத்தினர் தொல்லை கொடுப்பதாக வருத்தப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்ப் படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தேன். அதன் பிறகு சொந்த ஊருக்குச் செல்லவில்லை. எனது அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் பணம்தான் முக்கியம். என்மீது அவர்களுக்குப் பாசம் கிடையாது. கோல்கத்தா செல்வதற்கு கையில் பணம் இருக்கிறது. “அங்கு போனாலும் குடும்பத்தினரிடம் இருந்து அன்பு கிடைக்காது. அவர்கள் பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். எனது அம்மாவுக்குக்கூட எனது நலனில் அக்கறை இல்லை. அவர்கள் யாரும் என்னைப் பார்க்க வருவதும் இல்லை. போனில் எனது பிரச்சினைகள் குறித்துப் பேசினால்கூடக் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை.

எனக்கு வருமானம் எப்படி வரும் என்று கூட விசாரிப்பது இல்லை. “குடும்பத்தினருக்கு மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம்வரை அனுப்பி வைப்பேன். 10ஆம் தேதிக்குள் பணம் அனுப்பா விட்டால் திட்டுவார்கள். அவர்களுக்குப் பணம் கிடைத்தால் போதும்,” என்று ஐஸ்வர்யா தத்தா உருக்கமாகப் பேசி சக நடிகர், நடிகைகளைச் சோகக் கடலில் மூழ்கடித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்