ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

சென்னை: இலங்கை, சிங்கப்பூருக்குச் செல்லும் விமானங்களில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளி நாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இரு இளையர்கள் கைதாகினர். நேற்று காலை இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்ல இருந்த இலங்கையைச் சேர்ந்த சரவணன் (வயது 28) என்பவரை சோதனையிட்ட போது அவர் தனது இடுப்புப் பட்டையில் யூரோ நோட்டுகளை அவர் டேப் போட்டு ஒட்டி வைத்திருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் சனிக்கிழமை நள்ளிரவு சென்னை வந்த சென்னையைச் சேர்ந்த 33 வயதான யாசின் தனது உள்ளாடைக்குள் ரியால், தினார், யூரோ நோட்டு களை மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது