ரஞ்சித்: எனக்குத் திருப்தியளித்த திரைப்படம்

தத்துவம் என்பது நமக்கு முன் னால் உறுதியாக வாழ்ந்து காட்டி யவர்களிடம் இருந்தே பிறக்கிறது என்றும் அந்த வகையில் அம்பேத்கர் மட்டுமே தமக்கு முன்னோடி என்றும் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். அவரது சொந்தப் பட நிறுவனம் சார்பில் உருவாகி உள்ளது ‘பரி யேறும் பெருமாள்’. இப்படக்குழு வினர் நேற்று முன்தினம் செய்தி யாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் பேசிய ரஞ்சித், அம்பேத்கர் இழுத்து வந்த தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வதே தமது பணி என்றார். அந்தப் பணிக்கான தொடக்கமே இந்தப் படம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எனக்குள்ள வாய்ப்புகள் மூலம் தொடர்ந்து மனித சமூகத் திற்கு இடையேயுள்ள முரண்களை, முரணை உடைக்கிற வேலையைச் செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களை யும் கடந்து, சில வேலைகளைச் செய்ய வேண்டியது இருக்கிறது. “இந்தப் படம் உருவாகுவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்தி ருக்கிறார்கள். அவர்களில் முக்கிய மானவர் இயக்குநர் ராம். எனக்கு அவரையும் மாரி செல்வராஜையும் பார்க்கும்போது பொறாமையாக இருக்கும்.

“இப்படி ஓர் அப்பா, மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கிய விதம் மிகவும் நெகிழ்ச்சியானது. என்னால் முடிந் தவற்றை இந்தச் சமூகத்திற்குச் செய்யவேண்டும் என்கிற எண் ணம் சிறு வயது முதலே எனக் குண்டு. அந்த எண்ணம்தான் இப்போதும் என்னை இயக்குகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம்

18 Jul 2019

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

‘உணர்வு’ படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம்

18 Jul 2019

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் ‘உணர்வு’