2021க்குள் புதிய பாதுகாப்பு தரநிலைக்கு உட்பட வேண்டும்

மின் ஸ்கூட்டர்கள் போன்ற இயந்திர வசதியுடன் கூடிய தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் 2021ஆம் ஆண்டிற்குள் தீப்பாது காப்பு தரநிலை ஒன்றுக்கு உட்பட வேண்டியிருக்கும். அந்தச் சாதனங்கள் தீப் பற்றிக்கொள்ளக்கூடிய அபாயமே அதற்குக் காரணம். இதன் தொடர்பில் முன்மொழி யப் பட்ட சட்டம் ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டது. அதன்படி, விற்பனை யாளர்கள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து UL2272 தர நிலைக்கு உட்படும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை மட்டும் விற்க அனுமதிக்கப்படுவர். அமெரிக்காவை சேர்ந்த சுயேட்சை சான்றிதழளிக்கும் நிறுவனம் ஒன்று இந்தத் தரநிலையை உருவாக்கியுள்ளது.

இந்தப் பாதுகாப்பு தரநிலைக்கு உட்படாத இயந்திர வசதியுடன் கூடிய தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வைத்திருப்போர், 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் அச்சாதனங்களைப் பொது நடைபாதைகளில் பயன்படுத்த நிலப் போக்குவரத்து (அமலாக்க நடைமுறைகள்) மசோதா அனுமதி வழங்கும். UL2272 தரநிலை அறிமுகப்படுத்தப்படுவதற்கு இந்த காலஅவகாசம் வகைசெய்யும்.

கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி ஈசூனில் உள்ள ஒரு வீட்டில் இரவு முழுவதும் மின்னூட்டப்பட்ட இந்த மின் ஸ்கூட்டர் தீப்பிடித்துக்கொண்டது. படம்: லியான்ஹ வான்பாவ்